Freelancer / 2026 ஜனவரி 09 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை, நாளை மாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தின் பசறை, பதுளை, ஹாலி-எல, மீகாஹகிவுல, கந்தகெட்டிய, வெலிமடை, லுணுகலை மற்றும் ஊவா பரணகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் மினிப்பே பிரதேச லெயலக பிரிவுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும், உடதும்பர பிரதேச செயலக பிரிவுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் நாஉல, லக்கல, இரத்தோட்டை, உக்குவெல மற்றும் அம்பன்கங்ககோரள ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும், வில்கமுவ பிரதேச செயலக பிரிவுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் மத்துரட்ட, ஹங்குராங்கெத்த, நில்தண்டாஹினன மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நுவரெலியா பிரதேச செயலக பிரிவுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. R
53 minute ago
57 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
57 minute ago
1 hours ago
4 hours ago