2026 ஜனவரி 10, சனிக்கிழமை

பதுளை மாவட்ட பாடசாலைகள் 11 மணிக்கு மூடப்படும்

Editorial   / 2026 ஜனவரி 09 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (9) காலை 11 மணிக்கு மூடப்படும் என்று ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன தெரிவித்தார். தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு நேற்று (8) பிற்பகல் பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகள் குறித்து வெளியிட்ட சிறப்பு எச்சரிக்கை செய்தியின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதன்படி, இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகளை நடத்துவது பொருத்தமற்றது என்று கருதப்பட்டால், சம்பந்தப்பட்ட வலயப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி, இன்று (9) அத்தகைய பாடசாலைகளை நடத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன தெரிவித்தார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .