2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

இலங்கையை நோக்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Freelancer   / 2026 ஜனவரி 08 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, அடுத்த சில மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது நாளை மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையான காலப்பகுதியில், ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனைக்கு இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதனால் நாட்டின் பல பாகங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை ஏற்பட வாய்ப்புள்ளது. 

அத்துடன், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படலாம் என்பதால் கரையோரப் பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கோரப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அவசர உதவி அல்லது அனர்த்தங்கள் குறித்த தகவல்களை வழங்க, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற அவசர இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறும், மேலதிக பாதுகாப்பு உதவிகளுக்கு பிரதேச காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ள முடியும் எனவும் கோரப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .