2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

ஜிப்ரி மறைவு; ஊடகவியலாளர் சம்மேளனம் அனுதாபம்

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மறைவு ஊடகத்துறைக்கு மட்டுமல்லாது கல்வித் துறைக்கும் பாரிய இழப்பாகும் என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.ஜே.எம்.ஹனிபா வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஒலிபரப்புத் துறையில் பல இளம் தலைமுறையினரை உருவாக்கி, ஊடகப் பரப்பில் தனி முத்திரை பதித்த சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, கல்வித் துறையிலும் சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்கியவர்.

“ஆசிரியராக, அதிபராக கடமையாற்றியவர். ஊடகத்துறையூடாக மாணவர்களின் கல்வி அடைவை மேம்படுத்த அரும்பாடுபட்டவர்.

“நாடுதழுவிய ரீதியில் பொது அறிவு, விஞ்ஞானம் சார்ந்த விடயங்களை போதிப்பவராகவும் ஊடகத்துறை வளவாளராகவும் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வந்தார்.

“கல்வி, ஊடகத்துறை, சமூக மற்றும் அரசியல் என பல்துறை ஆளுமைகளைக் கொண்ட இவர் இன, மத பேதமின்றி அனைவருடனும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் முன்னுதராணமாக செயற்பட்டார்.

“அன்னாரது மறைவு, ஊடகத்துறைக்குப் பாரியதொரு வெற்றிடமாகும். அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன்,  அன்னார் மறுமை வாழ்வில் ஈடேற்றம் பெற்று, உயர்ந்த சுவனத்தை அடைய பிரார்த்திப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .