2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

தகவல் திரட்டு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை கமநல சேவை பிரிவுக்குபட்பட்ட பகுதிகளில், 2019/2020 பெரும் போக நெற்செய்கை, மேட்டுநிலப் பயிர்ச் செய்கையில் பாதிக்கப்பட்டுள்ள விவவசாயிகளிடமிருந்து தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக, அட்டாளைச்சேனைப் பிரதேச விவசாய விரிவாக்கல் நிலையத்தின் போதனாசிரியர் ஏ.எச். அப்துல் முபாறக் தெரிவித்தார்.

படைப்புழுத் தாக்கம், கபிலநிறத் தத்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது பயிர் விபரங்களை இம்மாதம் 07ம் திகதிக்கு முன்னர், அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் பதிவுசெய்யுமாறு, அவர் கேட்டுள்ளார்.

மேலதிக விவரங்களை 0759743156 எனும் அலைபேசியினூடாகப் பெற்றுக்கொள்ளலாமெனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--