2026 மார்ச் 12, வியாழக்கிழமை

ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Janu   / 2026 மார்ச் 12 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த மாதம் 18ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இடும் பணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா, அமைச்சருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை மற்றும் நிலக்கரி கொள்வனவு செயற்பாடுகளை முறையாக நிர்வகிக்க தவறியமை ஆகிய விடயங்களை அடிப்படையாக கொண்டே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக எதிர்க்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்திலுள்ள சுயாதீன உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

நொரொச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் 848 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .