2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தங்கச்சங்கிலிகளை திருடிய இரு பெண்கள் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி கோவிலின் தீர்த்தோற்சவத்தின்போது, பக்தர்களின் 06 தங்கச்சங்கிலிகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 21, 29 வயதுகளையுடைய புத்தளத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரை செவ்வாய்க்கிழமை (02) பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அத்தங்கச்சங்கிலிகளையும் கைப்பற்றியுள்ளனர்.  

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில் இப்பெண்களைக்  கைதுசெய்து விசாரணை செய்தபோது, தங்கச்சங்கிலிகளைத் திருடி தாம் அணிந்திருந்த ஆடையினுள் மறைத்துவைத்திருந்தமை தெரியவந்தது.
திருக்கோவில் சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற்று அங்கிருந்து கோவிலுக்குத்  திரும்பிக்கொண்டிருந்த பக்தர்களின்   தங்கச்சங்கிலிகளை மிகச் சூட்சுமமான முறையில் இவர்கள் திருடியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சந்தேக நபர்கள் இருவரும் உறவு முறையானவர்கள் எனவும் பொலிஸார் கூறினர். தங்கச்சங்கிலிகளை திருடிய இரு பெண்கள் கைது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .