2026 ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

Editorial   / 2026 ஜனவரி 27 , பி.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை, கலகொட, டோட்டரி சுனாமி கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, கலகொட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய திமுத்து சம்பத் என்ற இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இந்த நபரை கால் நடையாக சுட வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மோட்டார் சைக்கிளில் வந்து மோட்டார் சைக்கிளை வழியிலேயே விட்டுவிட்டு, இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X