2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

தடைசெய்யப்பட்ட சிகரெட் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜூலை 12 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

தடைசெய்யப்பட்ட 80 டொப் ரக சிகரெட்களும் மற்றும் 92 கிராம் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட 42 வயதுடைய நபரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், இன்று செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டுள்ளார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் விற்பனைக்காக வைத்திருந்த வேளையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்றுத் திங்கட்கிழமை (11) இரவு இந்நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
 
குறித்த நபரை, கல்முனை நீதவான் நீதமன்ற நீதவான் ஐ.பாயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று (12) ஆஜர் செய்த போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .