2026 ஜனவரி 28, புதன்கிழமை

கொட்டும் மழையில் நனைந்த குழந்தை நட்சத்திரம்: கடும் கண்டனம்

Editorial   / 2026 ஜனவரி 28 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரைத் துறையில் குழந்தைகளை எப்படி நடத்துகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

படப்பிடிப்புத் தளத்தில் குழந்தை நட்சத்திரம் மழையில் நனைந்தது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
 

சீனாவில் அந்தச் சம்பவம் நடந்தது. சீன நடிகை சிங் யுன் (Xing Yun) அண்மையில் மனம் திறந்தார். 

படப்பிடிப்புக்காக மழை பெய்வதைப் போல காட்சி அமைக்கப்பட்டபோது குழந்தை நீண்ட நேரம் நனைந்ததாக அவர் கூறினார். குழந்தையின் அழுகை நெஞ்சை உலுக்கியதாக நடிகை சிங் சொன்னார். 

காட்சியில் அவர் பிடித்திருந்த குடையை இறக்கியிருந்தால் குழந்தை நனைந்திருக்காது. ஆனால் அது நடிகர்களின் முகத்தை மறைக்கும் என்று இயக்குநர் அதற்குச் சம்மதிக்கவில்லை. நேரத்தைக் கருத்தில் கொண்டு குழந்தைப் பொம்மையைப் பயன்படுத்தவும் குழுவினர் அனுமதிக்கப்படவில்லை. 

குழந்தைக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் வெறும் 800 யுவான் என்று நடிகை சிங் தெரிவித்தார். படப்பிடிப்புக் குழுவினர் நடிகைகளையும் குழந்தைகளையும் இரக்கமின்றி நடத்துவது வழக்கம் என்றார் அவர். 

அனுபவத்தைப் பற்றி நடிகை சிங் இணையத்தில் கோபமாகப் பதிவு வெளியிட்டார். இணையவாசிகள் பலரும் படப்பிடிப்புக் குழுவைச் சாடினர். குழுவினரின் செயல் குழந்தையைத் துன்புறுத்தலுக்குச் சமம் என்று சிலர் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X