2021 மே 08, சனிக்கிழமை

'தமிழ், முஸ்லிம்களை சமத்துவப்படுத்திய தீர்வு வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 16 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

நல்லாட்சி அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்தீர்வானது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சமத்துவமான தீர்வாக அமைய வேண்டுமென்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்பார்ப்பென அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸை வரவேற்கும் நிகழ்வு, சாய்ந்தமருது ஐ{ம்மாப்; பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு உரையாற்றிய அவர், 'மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் தீர்வு மையத்தை அடையாளப்படுத்தியுள்ளார். எனவே, ஆட்சி அதிகாரப்பகிர்வின்போது, தென்கிழக்கு மாகாணமொன்றைப்  பெற்றுக்கொள்வதும் முஸ்லிம் காங்கிரஸின் இலக்காகும்' என்றார்.

'மேலும், சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சிமன்றத்தை ஏற்படுத்தித்தருமாறு அப்பகுதி மக்கள் விடுக்கும் கோரிக்கையை வென்று கொடுக்க வேண்டியது மு.கா. வின்; கடமையாகும். முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரமே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியுமென்பது மக்களின் நம்பிக்கையாகும். அந்த வகையில் தமக்கான உள்ளூராட்சிமன்றத்தை மு.கா. பெற்றுத்தர வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகையினால், அதனை நிறைவேற்றிக்கொடுப்பது எமது கட்சியின் கடமையாகும்' எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X