2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

நீர்நிலைகளின் தன்மை மற்றும் ஆழம் மாற்றமடைந்துள்ளதால் எச்சரிக்கை

Freelancer   / 2025 டிசெம்பர் 24 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த பண்டிகைக் காலத்தில் நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சமூக மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க இன்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக நீர்நிலைகளின் தன்மை மற்றும் ஆழம் மாற்றமடைந்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

உங்களுக்குத் தெரியாத நீர்நிலைகளில் இறங்கி நீராடவோ அல்லது அதனைப் பயன்படுத்தவோ முன்னதாக, அங்கிருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். சில வேளைகளில் பழைய இடங்களாக இருந்தாலும், அனர்த்தங்களுக்குப் பிறகு அவற்றின் ஆழம் அதிகரித்திருக்கக்கூடும் என்றார்.

இதேவேளை, பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய விபத்துக்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதால், அது தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க கேட்டுக்கொண்டார்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X