2021 மே 08, சனிக்கிழமை

'தேசிய உற்பத்திக்கு பாடுபட வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அரசாங்கத்திடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், நாட்டிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி தேசிய உற்பத்திக்கு அர்ப்பணிப்புடன் பாடுபட  வேண்டியது அனைவரினதும் கடமையென அம்பாறை மாவட்ட திவிநெகும உதவி ஆணையாளர் யூ.பி.எஸ்.அனுருத்த பியதாஸ தெரிவித்தார்;.

'முத்தான வியர்வை' எனும் தொனிப்பொருளில் வாழ்வின் எழுச்சி உற்பத்திக் கண்காட்சி, அட்டாளைச்சேனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை (27) நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வாழ்வின் எழுச்சித்திட்டமானது வருமானம் குறைந்த மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். வாழ்வின் எழுச்சித் திட்டமானது வெறுமனே நலன் உதவிகளை மட்டும் கொண்டதாக இல்லை. இதனுடன் சமூக அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, கல்வி, கலாசாரம், வாழ்வதார அபிவிருத்தித்திட்டமென்று பல்துறைகளிலும் கவனம் செலுத்தப்படுகின்றது' என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X