2021 மே 06, வியாழக்கிழமை

'திருத்த வேலைகள் முன்னெடுப்பு'

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பிரதேச சபைகளை வழுவூட்டும் 2015ஆம் ஆண்டின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கலிலுல் றஹ்மான் இன்று (23) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழ் இருக்கும் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் போன்ற பிரதேசங்களில் பல திருத்த வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த திருத்த வேலைத்திட்டங்களுக்கு 9 இலட்சத்து 97 ஆயிரத்தி 273 ரூபாய் 26 சதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளை இவ்வருட இறுதிக்குள் பூர்த்திசெய்ய வேண்டும் என்றார்.

மேலும்,பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவுக்கு சிறிய கட்டடம் ஒன்று அமைப்பதற்காக 4 இலட்சத்து 26 ஆயிரத்தி 333 ரூபாயும் அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள மடுவத்தினை திருத்தம் செய்வதற்காக 2 இலட்சத்து 12 ஆயிரத்தி 244 ரூபாயும் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதியை செப்பனிடுவதற்காக 1 இலட்சத்து 94 ஆயிரத்தி 930 ரூபாயும் ஒலுவில் திமிட்டன் ஓடை வடிகான் மற்றும் வீதியை திருத்தம் செய்வதற்காக 1 இலட்சத்து 63 ஆயிரத்தி 766 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைகள் யாவும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .