2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

தீ விபத்தில் மின்னியல் உபகரணக் கடை நாசம்

Niroshini   / 2016 மார்ச் 26 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கதுருவெல, பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில்,  மின்சார உபகரணங்களை விற்பனை செய்யும் கடையொன்று  எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீ விபத்தினால் பல இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான மின்சாரப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

ஸ்தலத்துக்கு விரைந்த தீயணைக்கும் படையினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின் ஒழுக்கு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்தின் காரணமாக எவ்வித உயிர்ச்சேதமும் இடம்பெறவில்லை என்று தெரிவித்த கதுருவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .