2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

நிதிக்குழுவில் தமிழ்ப் பிரதிநிதித்துவம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கல்முனை மாநகரசபையின் நிதிக்குழுவில் கடந்த ஒரு வருடகாலமாக இழக்கப்பட்டிருந்த தமிழ் பிரதிநிதித்துவம், மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் மேற்கொண்ட இணக்க செயற்பாட்டின் பயனாக மீண்டும் கிடைத்துள்ளது.

முதல்வரின் வேண்டுகோளின் பேரில் மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் விட்டுக்கொடுப்பு செய்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கமலதாசன் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் மாநகரசபையின் நிதிக்குழுவில் தமிழ் பிரதிநிதித்துவம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்நியமனத்திற்கு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாநகரசபையின் மாதாந்தசபை அமர்வில் ஏகமனதான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகரசபையின் நிதிக் குழுவைத் தெரிவு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது, ஒரு தமிழ் உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட கல்முனை மாநகர சபையில் இப்படியொரு குறைபாடு ஏற்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முதல்வர் நிஸாம் காரியப்பர் ஆகியோருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இதன்போது கல்முனை மாநகர சபையின் நிதிக்குழுவில் இழக்கப்பட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தான் காலக்கிரமத்தில் நிவர்த்தி செய்து தருவதாக முதல்வர் நிஸாம் காரியப்பர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .