2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவில்  நுளம்புகள் பெருகக்கூடிய  வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன், தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழான டெங்கொழிப்பு நடவடிக்கை புதன்கிழமை (14) முதல் ஒருவார காலத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய கிராமங்களிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார், சமூக மட்டத் தலைவர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுவினர் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று டெங்கு நோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டவுள்ளனர். அத்துடன், சுற்றுச்சூழலை துப்புரவு செய்யுமாறும் அறிவுறுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.   
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .