2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

நாவிதன்வெளியில் 12 டெங்கு நோயாளர்கள்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடத்தின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்;  டெங்கு நோயாளர்கள் 12 பேர் இனங்காணப்பட்டனர் என அப்பிரிவு வைத்திய அதிகாரி டொக்டர் ஜெ.மதன் இன்று (16) தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில்  முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தையிட்டு அரசாங்கத் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களை அறிவூட்டும் நடவடிக்கை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

 இனங்காணப்பட்ட நோயாளர்கள் கொழும்பு, சாய்ந்தமருது, சம்மாந்துறை, காரைதீவு, மருதமுனை போன்ற இடங்களுக்கு தொழிலுக்காக சென்று வருபவர்கள் ஆவர். ஆனால், இதுவரையில்  நாவிதன்வெளி பிரதேசத்தில் டெங்கு நோய் பரவக்கூடிய இடங்கள் இனங்காணப்படவில்லை.  இதற்காக நாங்கள் கவனக்குறைவாக இருக்காமல் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--