2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனை -அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் பாடசாலை போக்குவரத்து பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்;.

பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி, அட்டப்பள்ளம், நிந்தவூர், காரைதீவு ஆகிய கிராமங்களிலிருந்து அக்கரைப்பற்று, கல்முனை, மருதமுனை ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு நாளாந்தம் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்கின்றனர்.  

காலை வேளையில் கல்முனை -அக்கரைப்பற்று வீதியால் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. இந்த பஸ்களை குறிப்பிட்ட பஸ் தரிப்பிடங்களில் நிறுத்துமாறு தாம் கை அசைக்கின்றபோதிலும், பஸ்கள் நிற்காமல் செல்வதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு பஸ்கள் நிறுத்தாமல் செல்வதினால் மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே, கல்முனை - அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் காலை 06 மணிக்கு பாடசாலை பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு பெற்றோர் கோருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் அக்கரைப்பற்று மற்றும் கல்முனைச் சாலைகளின் முகாமையாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை கேட்டபோது, 'தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும்  பிராந்திய போக்குவரத்து அதிகாரசபையும் அனுமதி அளிக்கும் பட்சத்தில், பாடசாலை பஸ் சேவையை ஆரம்பிக்க முடியும்' என அவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .