Niroshini / 2016 மார்ச் 31 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
நல்லாட்சி அரசாங்கத்தின் 'கிராம இராஜிய' திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை கிராமத்தில் அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டங்களை இனம் காண்பதற்கான கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை, பாலமுனை அல்-ஹிதாயா பெண்கள் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச். தம்ஜீது இன்று (31) வியாழக்கிழமை தெரிவித்தார்.
கிராம இராஜிய திட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டில் அமுல்படுத்த வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களை ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகள் தோறும் தெரிவுசெய்யப்படவுள்ள வேலைத் திட்டங்களை செயற்படுத்தப்படவுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பொதுநிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் கருத்துகள் பெறப்பட்டு அக் கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை இனங்கண்டு அதனை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, வீதி நிர்மாணிப்பு, வடிகான் அமைத்தல், வாழ்வாதார உதவிகள், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 minute ago
34 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
34 minute ago
5 hours ago