2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

பிரமிட் மோசடி ; 16 சீனர்கள் கைது

Janu   / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணைய வழி ஊடாக சட்டவிரோதமான முறையில் (பிரமிட் முறை) பண மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மடிக்கணினிகள் (Laptops) 23, கைத்தொலைபேசிகள் 11, திசைவிகள் (Routers) 7, குரல் மொழிபெயர்ப்பு இயந்திரங்கள் 9 மற்றும் வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் 3,280  கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு 05, ஜாவத்தை வீதி மற்றும் டொன் கரோலிஸ் வீதி ஆகிய இடங்களில் சில நாட்களுக்கு முன்னர் தற்காலிகமாக தங்கியிருந்த சீன பிரஜைகள் குழுவொன்று,  சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாக கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த சீன பிரஜைகள் இலங்கையில் தங்கியிருந்து  வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணி, பல்வேறு நபர்களை ஏமாற்றி பிரமிட் மோசடியில் ஈடுபட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .