2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மட்டு. -பொத்துவில் ரயில் சேவை; கல்முனை மாநகரசபையில் பிரேரணை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா,எம்.எஸ்.எம்.ஹனீபா

மட்டக்களப்பு முதல் பொத்துவில்வரை ரயில்சேவையை விஸ்தரிப்பதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரும் பிரேரணை கல்முனை மாநகரசபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு, மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் புதன்கிழமை (06) மாலை நடைபெற்றது. இதன்போது,  மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் இப்;பிரேரணையை சமர்ப்பித்தார்.

இப்பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதி முதல்வர், 'தற்போது மட்டக்களப்புவரையான ரயில்சேவையை பொத்துவில்வரை விஸ்தரிக்க வேண்டுமென்ற மக்களின் அபிலாஷையை நிறைவேற்றுவதாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு கல்முனைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அளிக்கப்பட்ட  பல வாக்குறுதிகள் தற்போது அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மட்டக்களப்பு- பொத்துவில் ரயில் சேவைத்திட்ட உத்தரவாதத்தையும் நிறைவேற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்கள் சார்பில் கல்முனை மாநகரசபை வலியுறுத்துகின்றது' என்றார்.

'தற்போது நாட்டில் நல்லாட்சியுடன் கூடிய அமைதியான சூழல் நிலவுவதால், இங்குள்ள மக்களின் நீண்டகாலத் தேவையாக இருக்கின்ற ரயில்சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக கல்முனை மாநகரசபை இப்பிரேரணையை நிறைவேற்றி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டுசென்று, அதனை வெற்றி கொள்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .