Editorial / 2026 ஜனவரி 16 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
நான்கு வயது 8 மாதங்கள் கொண்ட சிறுமி ஒருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வெள்ளிக்கிழமை(16) உத்தரவிட்டார்.
வெளி மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நபர் தொழில் நிமித்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் குறித்த நபர் அவரது 4 வயது 8 மாதம் கொண்ட மகள் மீது பாலியல் சேஷ்டை விடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மனைவி தனது தாயாரிடம் செய்துள்ளார்.
இதையடுத்து தாயார் பொலிஸ் நிலையம் ஒன்றில் வியாழக்கிழமை (15) முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமியின் தந்தையாரை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரை வெள்ளிக்கிழமை (16) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியதை அடுத்து அவரை 29ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago