2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் பலி

Gavitha   / 2016 மார்ச் 20 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்,ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை 6.45 மணியளவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில்,  வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த உதுமான் கண்டு அப்துல் றஸீட் என்ற 68 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து ஒலுவில் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளொன்று, வீதியை கடக்க முற்பட்ட வயோதிபரை மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X