Princiya Dixci / 2016 ஜூலை 12 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவிதன்வெளிப் பிரதேசத்தில் மாணவர்கள் இருவருக்கு மதுபானம் கொடுத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 40 வயதுடைய நபருக்கான விளக்கமறியலை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடித்து கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், நேற்று திங்கட்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.
நாவிதன்வெளிப் பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்களுக்கு, கடந்த ஜுன் மாதம் 26ஆம் ஞாயிற்றக்கிழமை, மதுபானம் கொடுத்து மக்கள் நடமாட்டம் இல்லாப் பிரதேசம் ஒன்றில் வைத்து சந்தேகநபர், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சிறுவனின் தாய் ஒருவரால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபரை, கல்முனை நீதவான் நீதமன்ற நீதவான் ஐ.பாயாஸ் றஸாக், முன்னிலையில் நேற்று (11) ஆஜர்செய்த போது அவரது விளக்கமறியல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025