2021 மே 12, புதன்கிழமை

'முன்னுதாரணமானவர்களாக திகழ வேண்டும்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,எஸ்.கார்த்திகேசு

நாம் ஒவ்வொருவரும் மனித நேயமுள்ளவராக ஜனநாயக விழிமியங்களை மதித்து நடப்பவர்களாக இருப்போமாயின் மனித உரிமைகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் பற்றி பேசுவதற்கும் அதற்காக போராட்டங்கள், விழப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதற்குமான அவசியம் ஏற்பட்டிருக்காது என  கல்முனை பிராந்திய மனித உரிமைகள் பணிமனை இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸடீன் தெரிவித்தார்.

திருக்கோவில் கல்வி வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். சுகிர்தராஜன்  தலைமையில் வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று உலகலாவிய ரீதியில் மனித உரிமைகள், சிறுவர்களின் உரிமைகள் பற்றி அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இதற்குக் காரணம் மனிதனை மனிதன் மதிக்காமல் நடந்து கொள்வதும் மனிதனது சுயநலங்களுமே ஆகும்.

இன்று வீடுகளிலும் நிறுவனங்களிலும் அதிகமான மனித உரிமை, சிறுவர் உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன. முதலில் நாம் ஒவ்வொருவரும் இவ்வுரிமைகள் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்காக பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் நல்ல செயற்பாடுகளையும் மனித நாகரீகத்தையும் கட்டியெழுப்புவதற்காக நாம் ஒவ்வொருவரும் முன்னுதாரணமானவர்களாக இருக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .