Editorial / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை, சம்புகளப்பு பிரதேசத்துக்குள் இன்று (23) அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டமையால், கிராமவாசியொருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கிராமவாசியை, யானை துரத்தி வந்ததாகவும் எனினும் அவர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அட்டாளைச்சேனை, பிரதேசத்தில் தங்களது பிரதான தொழிலாக விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் உட்பட முல்லைத்தீவு, சம்புக்களப்பு, சம்புநகர், ஆலம்குளம் போன்ற கிராமங்களில் வாழும் மக்கள், தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, அட்டாளைச்சேனை ஆலம்குளம் பிரதான வீதியையே பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வீதியில், சுமார் இரண்டு கிலோ மீற்றர் பகுதியில் மின்சாரம் இன்மையினால், உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளாந்தம் பயணிப்போர் யானைகள், முதலைகளின் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருகின்றனர். கடந்த காலங்களில் குறித்த பகுதிகளில் பலர் தாக்குதல்களுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
யானை பாதுகாப்பு வேலி அமைப்பது தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தும், இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையென விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, யானைகளின் அட்டகாசத்தைத் தடுக்க, பொருத்தமான இடங்களில் யானை வேலிகளை அமைத்து, மக்களின் பாதுகாப்புக்கும் வாழ்வாதார உயர்வுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு விவசாயிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
7 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago