2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

5 வருடங்களுக்கு மேல் ஏமாற்றப்படும் அவலம்

Janu   / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் ஆசிரியர் பணிக்காக அமர்த்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐந்து ஆண்டுகள் ஆகியும் நியமனம் கிடைக்காத  நிலையில் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் அலுவலகத்தில்   புதன்கிழமை(31) முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்   ஆசிரியர் பணிக்காக அமர்த்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட குறித்த பட்டதாரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நியமனங்களை கோரி பல போராட்டங்களை முன்னெடுத்து இருந்தாலும்  கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும்  குறித்த பட்டதாரிகளை கவனத்தில் கொள்ளவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் படத்திலிருந்து அவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ஆசிரியர் பணியை முன்னெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில்   புதன்கிழமை (31) நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்க கோரி கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.

இந்த நிலையில்   மன்னாரில் உள்ள சுமார் 170 க்கு மேற்பட்ட புதன்கிழமை (31ஆசிரியர் பணியை முன்னெடுக்கும் பட்டதாரி மாணவர்கள்    இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மன்னார் அலுவலகத்தில் தமது கையெழுத்து அடங்கிய முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட   பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் ரீ. எம். றாகித்  தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X