2020 நவம்பர் 28, சனிக்கிழமை

யானை தாக்கி ஒருவர் படுகாயம்

Princiya Dixci   / 2016 மார்ச் 15 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசுகனகராசா சரவணன், வி.சுகிர்தகுமார், எம்.எஸ்.எம்.ஹனீபா

திருக்கோவில், கஞ்சிக்குடியாறு ரூபஸ் குளப் பகுதியில் உள்ள வயலுக்கு மேச்சலுக்குச் சென்ற ஆடுகளைத் தேடிச் சென்ற ஒருவரை யானை தாக்கியதில் அவர் பபடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம், நேற்று திங்கட்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

விநாயகபுரத்தைச் சேர்ந்த 55 வயதுடைய கோபாலப்பிள்ளை சுந்தரலிங்கம், தனது ஆடுகள் மேச்சலுக்குச் சென்று பட்டிக்கு திரும்பிவராத நிலையில் ஆடுகளைத் தேடி சம்பவதினமான நேற்று இரவு 7.30க்கு கஞ்சிக்குடியாறு ரூபஸ் குளப்பகுதிக்குச் சென்ற போது யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர், திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--