2021 ஜனவரி 20, புதன்கிழமை

யானை தாக்கியதில் விவசாயி பலி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 11 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆத்துக்கண்டம் வயல்வெளியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி தம்பிலுவில் கிராமத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான மார்க்கண்டு குணரெட்ணம் (வயது 57) என்ற விவசாயி  பலியாகியுள்ளார்.

தனது வயலில் இரவு வேளைக் காவல் கடமையில் ஈடுபட்டுவிட்டு, இன்று திங்கட்கிழமை காலை வீடு திரும்ப இவர் முற்பட்டுக்கொண்டிருந்தபோதே, யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .