2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் கைது

Administrator   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை,கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி  என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை  இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன்  நேற்று திங்கட்கிழமை  கல்முனை  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சட்ட விரோதமாக கூட்டம் கூடியமை மற்றும்  மாநகர சபைக்கு சொந்தமான உடைமையை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே பொலிஸார் இவரைக் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு  விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த அவர்  வாக்கு மூலம்  பதிவு செய்த பின்னர்  கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து,கல்முனை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ஹென்றி மகேந்திரனை   பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி  மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .