Editorial / 2026 மார்ச் 04 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

திமுகவை விமர்சனம் செய்து எக்ஸ் (X) தளத்தில் போஸ்டுகள் போட்டுகொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் விஜய் செம அப்செட் என்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், அவரது மனைவி சங்கீதா நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறியிருப்பதுதான். இது வெறும் குடும்பப் பிரச்சனை மட்டுமல்ல, விஜய்யின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் 'விவகாரம்' என்கிறார்கள் அரசியல் சீனியர்கள்.
நடிகராக இருக்கும்போது தனிப்பட்ட வாழ்க்கை திரைக்குப் பின்னால் இருந்தது. ஆனால், இப்போது அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். தமிழக வெற்றி கழகத்தின் (TVK) 'விசில்' சத்தம் மாநிலம் முழுக்க ஒலிக்க வேண்டும் என அவர் திட்டமிட்டுக்கொண்டு இருக்க, செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் இருந்து வந்த 'சம்மன்' அந்த விசில் சத்தத்தையே அடக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் (டிசம்பர் 5, 2025 அன்று தாக்கல் செய்யப்பட்டு, தற்போது குடும்ப நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது) சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அதிர வைக்கின்றன:
2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய்க்கு ஒரு பிரபல நடிகையுடன் தொடர்பு இருப்பது தெரிந்ததிலிருந்தே விரிசல் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நடிகையுடன் விஜய் தொடர்ந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ததும், அவர் சமூக வலைதளங்களில் போடும் புகைப்படங்கள் விஜய்யால் தடுக்கப்படாததும் தனக்கு மிகப்பெரிய மன வேதனையைத் தந்ததாக சங்கீதா தரப்பு குமுறுகிறது.
அரசியல் களத்தில் விஜய் சந்திக்கப்போகும் மிகப்பெரிய சவால் இதுதான். தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு வேட்பாளர் தனது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யும்போது, மனைவியின் சொத்து விவரங்களையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அந்த படிவத்தில் (Form 26) மனைவியின் கையெழுத்து அவசியம்.
சங்கீதா தற்போது விஜய்யுடன் இல்லை. விவாகரத்து வழக்கு உச்சகட்டத்தில் இருக்கும்போது, விஜய் கேட்கும் ஆவணங்களில் சங்கீதா கையெழுத்திடுவாரா என்பது சந்தேகமே.
சங்கீதாவின் பெயரில் இருக்கும் சொத்துக்களைப் பட்டியலிடுவதில் ஏதேனும் குளறுபடி நடந்தால், அதுவே வேட்புமனு நிராகரிக்கப்பட காரணமாகிவிடும்.
"குடும்பத்தையே வழிநடத்த முடியாதவர், நாட்டை எப்படி வழிநடத்துவார்?" என்ற கேள்வியைப் பிரதான எதிர்க்கட்சிகள் இப்போதே கையில் எடுக்கத் தொடங்கிவிட்டன.
நீதிமன்றத்தின் அடுத்த விசாரணை ஏப்ரல் 20-ஆம் திகதி வரவிருக்கிறது. அதற்குள் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், 'விஜயின்' அரசியல் எண்ட்ரி தடையின்றி நடக்குமா? அல்லது குடும்பப் போர் தேர்தல் போரை முறியடிக்குமா?
17 minute ago
21 minute ago
27 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
27 minute ago
46 minute ago