S.Renuka / 2026 மார்ச் 03 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
"உலகமே எதிர்த்தாலும் உன்னை நான் பிரிய மாட்டேன்". எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய மெசேஜ். த்ரிஷா போட்ட அந்த பதிவின் பின்னணி என்ன..? என்பது குறித்து வெளிவந்த கதையை சமூக ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

TVK தலைவரும், நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து நடைமுறைகள் குறித்த செய்திகள் தற்பொழுது பேசுபொருளாகியுள்ளன.
இந்தச் சூழலில், நடிகை த்ரிஷா வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு சமூக வலைத்தள பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"என்ன நடந்தாலும், எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், இந்த உலகமே உனக்கு எதிராக நின்றாலும்… நான் உன்னை விட்டு விலகமாட்டேன்" என்ற வாசகங்கள் அடங்கிய பதிவு ஒன்று த்ரிஷாவின் பெயரில் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் - சங்கீதா பிரிவுக்கு த்ரிஷா தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில், இந்தப் பதிவு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல அமைந்தது.

வைரலாகும் இந்தப் பதிவு குறித்து ஆய்வு செய்ததில் சில முக்கிய உண்மைகள் தெரியவந்துள்ளன: வைரலாகும் அந்தப் பதிவு த்ரிஷா தற்போது வெளியிட்டது அல்ல. அது பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு சூழலில் அவர் பதிவிட்டது அல்லது யாரோ எடிட் செய்தது எனக் கூறப்படுகிறது. விஜய்யின் விவாகரத்து விவகாரம் வெடித்த பிறகு, த்ரிஷாவின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இது போன்ற எந்தப் பதிவும் சமீபத்தில் பதிவேற்றப்படவில்லை. பழைய பதிவை தற்போது நடக்கும் சம்பவங்களோடு தொடர்புப்படுத்தி, தவறான உள்நோக்கத்துடன் சிலர் பரப்பி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படும் மனுவில் அதிர வைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது 1999இல் முறைப்படி திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், ஒரு நடிகையுடனான தொடர்பு மற்றும் மன உளைச்சல் காரணமாகவே இந்தப் பிரிவை நாடுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிக்கும் உரிமை மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் ஆகியவற்றை சங்கீதா கோரியுள்ளதாகத் தெரிகிறது.

தற்போதைய நிலையில், வைரலாகும் த்ரிஷாவின் பதிவுக்கும் விஜய்யின் விவாகரத்து விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.
இது போன்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை விஜய் தரப்பிலிருந்தோ அல்லது த்ரிஷா தரப்பிலிருந்தோ இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago