2021 மே 12, புதன்கிழமை

வாகன விபத்தில் ஐவர் காயம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்,வி.சுகிர்தகுமார்,கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னமுகத்துவாரம் பகுதியில் இன்று(30) நண்பகல் இடம்பெற்ற பஸ்-லொறி விபத்தில் ஒருவரின் கைகள் உடைந்த நிலையில் நால்வர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயடைந்தவர்கள் பஸ்ஸில் பயணித்தவர்கள் என அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவிலை நோக்கி சென்ற அக்கரைப்பற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியை சின்னமுகத்துவார பகுதியில் வைத்து திருக்கோவில் பகுதியில் இருந்து வருகை தந்த லொறி கடக்க முற்படுகையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

லொறி பாதையை விட்டு கடந்து  அருகில் உள்ள பாதுகாப்புக் கடவையை உடைத்து உள்ளே பாய்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் சாரதிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .