Suganthini Ratnam / 2015 நவம்பர் 18 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆலம்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப வைத்திய பராமரிப்புப் பிரிவு நிலையத்தை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
350 குடும்பங்கள் வாழ்கின்ற இக்கிராமத்தில் இதுவரைகாலமும் முழுநேரமாக இயங்கக்கூடிய வைத்தியசாலையொன்று இல்லாமை பாரிய குறையாக உள்ளது. இக்கிராம மக்கள் 14 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அல்லது அதைவிடத் தூரத்திலுள்ள அம்பாறை போதனா வைத்தியசாலைக்கே சிகிச்சைக்காக செல்ல வேண்டியுள்ளது. மேலும், இந்த ஆரம்ப வைத்திய பராமரிப்புப் பிரிவில் முதலுதவிச்சேவை குறித்த ஒரு சில மணித்தியாலங்கள் மாத்திரமே நடைபெறுவதாகவும் பொதுமக்கள் கூறினர்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரிடம் நேற்று புதன்கிழமை கேட்டபோது, 'கடந்த யுத்த சூழ்நிலையில் பாதிப்புக்குள்ளான கஷ்டப் பிரதேசங்களில் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், ஆலம்குளம் ஆரம்ப வைத்திய பராமரிப்புப் பிரிவு நிலையத்தையும் தரம் உயர்த்துவதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

35 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago