2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

வினைத் திறமை காண் தடை தாண்டல் பரீட்சை

Niroshini   / 2016 மார்ச் 22 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் சிற்றூழியர்களுக்கான 1ஆவது வினைத்திறமைகாண் தடை தாண்டல் பரீட்சைக்கு  விண்ணப்பித்தவர்களுக்கான வினைத் திறமை காண் தடை தாண்டல் பரீட்சை, எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் மாலை 1.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிற்றூழியர்களாக கடமையாற்றி வந்தவர்களுக்கே இவ்வினைத் திறமை காண் தடை தாண்டல் பரீட்சை இடம்பெறவுள்ளது.

இப்பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் தேசிய அடையாள அட்டையுடன் குறித்த இடத்துக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .