2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

நேபாள பாராளுமன்றம் கலைப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 13 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாள பாராளுமன்றம் நேற்று (12) இரவு கலைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நேபாளத்தில் இடம்பெற்றுவரும் போராட்டத்தால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியதையடுத்து, நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர்நீதிமன்ற முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி பிரதமராக பதவியேற்றார். 

இந்நிலையில் அவரது பரிந்துரையின் கீழ் ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் நேற்று பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார். 

அதன்படி, அடுத்த வருடம் மார்ச் 21ஆம் திகதி நேபாள பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .