2021 ஜனவரி 23, சனிக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 10 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுகிர்தகுமார், நடராஜன் ஹரன்

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட தம்பட்டைப்  பிரதேசத்தில் நேற்றுச் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இருவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்களே படுகாயமடைந்துள்ளதுடன், இவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பொத்துவிலிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்றுகொண்டிருந்த இ.போ.ச. பஸ் வண்டியுடன் அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றது.

03 மோட்டார் சைக்கிள்களில்; 05 நண்பர்கள் கதிர்காமத்துக்கு பயணித்துக்கொண்டிருந்தபோதே 02 பேர் பயணித்த மோட்டார் சைக்கிள்  விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தைத் தொடர்ந்து குறித்த  பஸ் வண்டியின் சாரதி பொலஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பஸ் வண்டியும் மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .