2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி: ஒருவர் படுகாயம்

Gavitha   / 2016 மார்ச் 16 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை பொத்துவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட லாகுகல முதலாம் கட்டை வீதியில், நேற்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற விபத்தில், இளைஞனொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதோடு, மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சியம்பிலாண்டுவ பிரதேசத்தில் இருந்து பொத்துவில் நோக்கி சென்றுக்கொண்டிருந்த சைக்கியொன்று, வேகக்கட்டுப்பாட்டை மீறி, மரத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது சைக்களிலில் பயணித்த பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் முஜித் (வய்து 32) என்ற இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதோடு, அப்துல் கரீம் ரசீத் (வயது 24) என்ற இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .