2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

சுவாச நோய்களுக்கு இந்தியாவில் மருந்து கண்டுபிடிப்பு

Editorial   / 2025 ஒக்டோபர் 20 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் முதல் முறையாக ‘நபித்ரோமைசின்’ என்ற பெயரில் ஆன்டிபயாட்டிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, புற்று நோயாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் மூலக்கூறாகும். இது மருந்துத் துறையில் இந்தியாவின் தன்னிறைவை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்றம் ஆகும்.

இந்தியா இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தி உள்ளது. இந்த கண்டுபிடிப்பு ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.  என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங்   கூறியுள்ளார்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .