2021 மே 06, வியாழக்கிழமை

விபத்தில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்   

அக்கரைப்பற்று, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு சிப்பித்திடல் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை பார ஊர்தியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தினுள் விழுந்ததில் படுகாயமடைந்த 04 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் சாரதியும் பார ஊர்தியில் பயணித்த 03 சிறுவர்களுமே காயமடைந்துள்ளனர்.

அக்கரைப்பற்றிலிருந்து  சாகாம பிரதேசத்தை நோக்கி சென்ற பாரஊர்தி விபத்துக்குள்ளானதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .