2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

தொண்டையில் கொய்யாக் காய் இறுகியதால் 10 மாத குழந்தை பலி

Super User   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை, தெஹியத்தக்கண்டிய கௌதியில் உள்ள கெம்மலபிட்டிய கிராமத்தில் 10 மாதக்குழந்தையொன்று தொண்டையில் கொய்யாக் காய் சிக்கி இறுகியதால் மூச்சுத்திணறி இன்று இறந்துள்ளது.  பதியத்தலாவ நகரில் இருந்து  15 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கெம்பிட்டிய கிராமத்தைச் சேர்ந்த குழந்தையொன்றே இறந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு குறித்த குழந்தையின் தாய் கூறுகையில்,

"எனது கணவரிடம் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளும் படி கூறி விட்டு, தோட்டத்திற்கு சென்று விட்டேன். கணவர் பிள்ளைகளை முற்றத்தில் வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்திருக்கின்றார்.

அப்போது ஏதோ மணம் வர ,சமையலறை பக்கமாக சென்ற கணவர் திரும்பி வருவதற்குள், முற்றத்தில் கிடந்த கொய்யாக்காயை சாப்பிட்ட குழந்தைக்கே இந்த பரிதாபகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது"  என்றார்.

இதனையடுத்து, அவசரமாக பதியத்தலாவ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை, இடை நடுவிலேயே இறந்து விட்டதாகவும் குழந்தையின் தாய் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .