S.Renuka / 2026 பெப்ரவரி 16 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொடலிங் துறையில் தொடங்கி, சிறிய விளம்பரங்களில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த். தமிழில் துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.

அதன் பின்னர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி, கழுகு 2, பெஸ்டி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார்.
இந்த நிலையில், தனது சிறுபருவ அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், “எனக்கு பத்து வயது இருக்கும்போது, 100 ரூபாய் காசுக்காக அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் முன்னால் லூசுத்தனமாக டான்ஸ் ஆடியிருக்கேன். என் நடனத்தை பார்த்து ரசித்து கை தட்டி 100 ரூபாய் கொடுப்பார்கள்.
அந்த 100 ரூபாய்க்காக அனைவரின் முன்னாலும் டான்ஸ் ஆடிய நிலைமையும் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறது ” என யாஷிகா ஆனந்த் கூறியிருக்கிறார்.
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago