2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

13ஆவது பட்டமளிப்பு விழா

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2020 மார்ச் 12 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான 13ஆவது உள்வாரி மாணவர்களுக்கான பொதுப் பட்டமளிப்பு விழா, இம்மாதம் 16ஆம், 17ஆம் திகதிகளில் காலை 09 மணிக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

இப்பட்டமளிப்பு விழா, மூன்று அமர்வுகளாக நடைபெறவுள்ளதுடன், இதில் மொத்தமாக 1,013 பேர் பட்டங்களைப் பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

16ஆம் திகதி திங்கட்கிழமை முதலாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 156 மாணவர்களும், கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 188 மாணவர்களும் கலைகலாசார பீடத்தில் 03 முதுமாணி பட்டங்கள் அடங்களாக 347 பேரும் படங்களை பெறவுள்ளனர்.

இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீடத்தைச் சேர்ந்த 281 மாணவர்களும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 82 மாணவர்களுமாக மொத்தம் 363 பேர் பட்டங்களை பெறவுள்ளதாகவும், தெரிவித்தார்.

17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்றாவது அமர்வில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 281 மாணவர்களும், இதில் முதுமாணி பட்டங்களை 22 பேருமாக மொத்தம் 303 பேர் பட்டங்களை பெறவுள்ளனர்.

உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தலைமையில் நடைபெறவுள்ள முதலாவது அமர்வில், மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் பட்டமளிப்பு பேருரையையும், இரண்டாவது அமர்வில், ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் ஜாமினி சேனநாயக்கா பட்டமளிப்பு பேருரையையும், மூன்றாவது அமர்வில், சிரேஷ்ட பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி பட்டமளிப்பு பேருரையை ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

இதன்போது, பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.ஏ. கரீம், ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். அமீன் ஆகியோருக்கு கௌரவப் பட்டம் வழங்கவுள்ளதாகவும், உபவேந்தர் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .