2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை ஸாஹிரா கல்லூரியிலிருந்து 139 மாணவர்கள் பல்கலைக்கழகம் அனுமதி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. பரீட்சை முடிவுகளின்படி கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலிருந்து 139 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்று வரலாற்று சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொறியியல் துறையில் பாடசாலை பரீட்சாத்திகளாக தோற்றிய மாணவர்களுள் 13 பேர் பொறியியல் துறைக்கும் தனிப்பட்ட பரீட்சாத்திகளாக தோற்றிய 4 மாணவர்களும் மருத்துவ துறைக்கு 2 மாணவர்களும் தனிப்பட்ட பரீட்சாத்திகளாக தோற்றிய 3 மாணவர்களும் பௌதீக விஞ்ஞான துறைக்கு 30 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞான துறைக்கு 6 மாணவர்களும் விவசாய விஞ்ஞான துறைக்கு 4 மாணவர்களும் வர்த்தக துறையில் 4 மாணவர்களும் முகாமைத்துவ துறையில் 6 மாணவர்களும் கலைத்துறையில் 6 மாணவர்ளும் ஏனைய துறைகளுக்கு 68 மாணவர்களுமாக தகுதி பெற்றுள்ளனர்.

3 பாடங்களிலும் அதி திறமைச் சித்தியான 'ஏ' யினை 3 மாணவர்களும் 2 ஏ , 1 பீ யினை 6 மாணவர்களும் 2 ஏ 1 சீ யினை  2 மாணவர்களும் பெற்றுள்ளனர். உயர்தர கணிதப்பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் 1 ஆம், 2ஆம் , 3ஆம் ,5ஆம் , 6ஆம் 11ஆம் 19 ஆம் நிலைகளை இக்கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளதுடன் அகில இலங்கையிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள் முதன்மை நிலையையும் வகிக்கின்றனர்.

இச்சாதனை புரிந்த மாணவர்களுக்கும்  கற்பித்த ஆசிரியர்களுக்கும்  கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் பழையமாணவர் சங்கம்  பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் நலன் விரும்பிகள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0

 • m.a,asfak ahamed Friday, 10 December 2010 10:11 PM

  இலங்கை முஸ்லிம்களின் தேசிய சொத்து கல்முனை சாஹிரா தனது நிலையை மேலும் உயர்த்து விட்டது. வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  Nafar Saturday, 11 December 2010 03:48 PM

  மிகவும் பெருமையாக இருக்கிறது இன்னும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாகத்தை கொடுக்க வேண்டும். இந்த சாதனையை தொடர்ந்தும் பாதுகாக்க மாணவர்களும் ஆசிரியர்களும் முன்வரவேண்டும்.

  Reply : 0       0

  sitheek Saturday, 11 December 2010 04:56 PM

  வாழ்த்துக்களுடன் ஒரு வேண்டுதல். பழைய மாணவர்கள் எந்த நாட்டில் இருந்தலூம் உங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. அவர்கள் தனிப்படவோ அல்லது குடும்பமாகவோ பல உதவியளிக்க முடியும்.

  Reply : 0       0

  Mohamed Dilshad Sunday, 12 December 2010 12:13 AM

  என்றும் வாழ்த்துக்கள் பெருமை தேடி தந்த மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் ..

  Reply : 0       0

  MHM. Ashraff - Dubai Monday, 13 December 2010 12:42 AM

  என் மாணவ உள்ளங்களுக்கு துபாயில் இருந்து என் அன்பான வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  mm jesmin kalmunai Monday, 13 December 2010 03:18 AM

  சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  இதுக்கு காரணமாக இருந்த முன்னாள் அதிபர் மர்ஜுணா காதருக்கு நன்றிகள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--