2021 மார்ச் 01, திங்கட்கிழமை

16 கூரைத்தகடுகள் வழங்கி வைப்பு

Super User   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

திகாமடுல்ல மாவட்ட நாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சவளக்கடை, மத்தியமுகாம், 6ம் கொலணி மற்றும் 12ம் கொலணி ஆகிய பிரதேசங்களில் குடிசையில் வசிக்கும் 23 வறிய குடும்பங்களுக்கும் தலா 16 கூரைத்தகடுகள் புதன்கிழமை (2) வழங்கி வைக்கப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் துறைப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான  எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கூரைத் தகடுகளை வழங்கி வைத்தார்.

நாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம், நாவிதன்வெளி பிரதேச மக்கள் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதார தொழில்களை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதையும், அவர்களின் வீடமைப்பு நிலைமைகள் பற்றியும் எடுத்துக் கூறியதையடுத்தே அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இக்கூரைத் தகடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .