Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 30 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சமமின்மையை சீர் செய்யும் நோக்கில் கல்முனைக் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 185 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
இந்நிலையில், கல்முனை கல்வி வலயத்திலிருந்து 126 ஆசிரிர்களும், சம்மாந்துறைக் கல்வி வலயத்திலிருந்து 43 ஆசிரியர்களும்,, அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து 16 ஆசிரியர்களும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் கூடுதலானோர் கிண்ணியா, மூதூர், திருகோணமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பவுள்ளனர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் 2012 ஜனவரி முதல் செயற்படும்.
மூன்றாண்டு காலத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றவேண்டுமன்ற நிபந்தனையில் வழங்கப்படும் இவ்விடமாற்றம் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட புள்ளித் திட்டத்தின் அடிப்படையில் இடம்பெறுகிறது.
இவ்விடமாற்றம் வருடாந்த இடமாற்றம் அல்ல எனக்குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இவ் இடமாற்றத்திற் கெதிராக மேன்முறையீடுகளை வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாகாணக் கல்விபணிப்பாளருக்கு அனுப்பிவைக்க முடியுமெனவும் செயலாளர் புஸ்பகுமார அறிவித்துள்ளார்.
ஆசிரியர் சமமின்மையை போக்கும் விதத்தில் இவ்இடமாற்றம் இவ்வருடம் ஜீன் மாதம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் தொழிற்சங்கங்கள், ஆளும்கட்சி, எதிர்கட்சி, அரசியல்வாதிகளின் பலத்த எதிர்ப்பின் காரணமாக இறுதிநேரத்தில் ஜனரிபதியின் பணிப்புரைக்கமைய இரத்தச் செய்ய்பட்டது தற்போது கல்முனை மாவட்டத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள 185 ஆசிரியர்களுள் பெரும்பாலோனோர் பெண் ஆசிரியர்களாவர் அதிலும் குறிப்பாக குடும்பத் தலைவிகளே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
18 minute ago
53 minute ago
1 hours ago
waaqiff Wednesday, 30 November 2011 08:06 PM
கல்முனை இல் மாத்திரம் அதிகமானோர். ஏதேனும் விசேட காரணம்?
Reply : 0 0
pasha Wednesday, 30 November 2011 09:54 PM
வாகிப், கல்முனையில் படித்தவர்கள் அதிகம்.
Reply : 0 0
kulathooran Wednesday, 30 November 2011 10:44 PM
முஸ்லிம் காங்கிரஸ் கோட்டை கல்முனை.
Reply : 0 0
USM Wednesday, 30 November 2011 10:51 PM
பாஷா, கல்முனையில் எனது வீட்டுக்கு பக்கத்துல ஸ்கூல் கட்டி தாங்க என்று கேட்பவர்கள் அதிகம்....
Reply : 0 0
Pottuvilan Friday, 02 December 2011 02:10 AM
இடமாற்றம் என்பது சகஜமான ஒன்று. இதை பெரிதுபடுத்த தேவை இல்ல.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 minute ago
53 minute ago
1 hours ago