Super User / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்தைச் சேர்ந்த தாயையும் 2 பிள்ளைகளையும் கடந்த திங்கட்கிழமை முதல் காணவில்லை என கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளி வீதியைச் சேர்ந்த 25 வயதான சீனித்தம்பி நசீரா என்ற தாயையும் அவரது 5 வயதான அஜ்மீர் என்ற மகனையும்யும் 3 வயதான உசைனா என்ற மகளையுமே கடந்த திங்கட்கிழமை மாலை 2.00 மணியிலிருந்து காணவில்லை என அவரது சகோதரன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
இது தொடர்பான அறிவித்தல் கல்முனை பிரதேசத்திலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நௌபர் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிகின்றார்.
1 hours ago
1 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
06 Nov 2025