2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

'சாய்ந்தமருதுக்கு தனி பிரதேசசபை கேட்பது நகரத்தை கிராமமாக்குவது போலாகும்'

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருதுக்கென தனியான பிரதேசசபை கேட்பது நகரத்தை கிராமமாக்கித் தாருங்கள் என்று கேட்பதற்கு சமமாகும் என கல்முனை பிரதி முதல்வர் ஏ.ஏ .பஷீர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
                                                   

கிராமத்தை நகரமாக்குவது என்பது  வளர்ச்சி.  ஆனால், நகரத்தை   கிராமமாக்குவது என்பது வீழ்ச்சியும், மடமையும் ஆகும்.                   கல்முனை மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட கல்முனை மாநகரசபை கட்டிடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர்  தூரத்திலுள்ள சாய்ந்தமருது நகருக்கென தனியான பிரதேசசபை கேட்டு  சில அரசியல்வாதிகளின் ஊதுகுழல்கள் அண்மைக்காலமாகக் சில பொய்யான வீன் பழிகளையும்  கூறி வருவதுடன், பிரதேசவாதத்தையும் அடிக்கடி தூண்டியும் மக்களையும் குழப்பி  விடுகின்றன. உண்மையில்  நானும்  சாய்ந்தமருதை சேர்ந்தவன் என்ற முறையிலும் கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் என்ற வகையிலும் இதை வன்மையாகக்  கண்டிக்கிறேன்.

கடந்த  காலங்களில் முன்னை நாள் மேயர் ஹாரிஸ் இருக்கும்போது கல்முனைக்கு செய்த அபிவிருத்தி வேலைகளைப் போல் சாய்ந்தமருதுக்கும் செய்து வந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
                                                  

8 கோடி ரூபாய் செலவில் வடிகாண் வசதி, 300க்கு மேற்பட்டோருக்கு நீர் இணைப்பு, கொன்கிரீட் வீதி, கடற்கரைப் பூங்கா, சுகாதார நிலையம், கடற்கரையில்  மீள்சுத்திகரிப்பு நிலையம், தோனாவைச் சுற்றியுள்ள 300   குடும்பங்களுக்கு மலசல குழி வசதி, கல்முனைக்கு சமமான மின் இணைப்பு போன்ற  பல வசதி வாய்புகளையெல்லாம்  பெற்று விட்டு எமது ஊருக்கு ஒன்றும் செய்யவில்லை என்பது எவ்வளவு  நன்றி கெட்டதனமாகும்.  

                                                                          
இதற்கு முன்னிருந்தே  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இப்படி பாகுபாடின்றி சேவைகளை செய்து வந்துள்ளனர் என்பது வரலாறு. இப்படியிருக்க சில சுயநலவாதிகள் அவர்களின் சுய தேவைக்காக ஊரை இரண்டாக பிரித்து அதில் அவர்கள் இலாபம் அடைய முனைவது எந்த வகையிலும் நியாயமற்றது.
                                                   

பல்கலைக்கழகத்தில் படிக்கும் எந்தவொரு புத்தியுள்ள மாணவனும் என்னை பாலர் பாடசாலையில் சேர்த்துவிடுங்க என்று கூற மாட்டான். இதை இந்த சுயநலவாதிகள் புரிந்து கொள்ளே வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--