2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஒலுவில் கடற்படை முகாமை அகற்ற நடவடிக்கை;ஹக்கீமிடம் ஜனாதிபதி உறுதி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

அண்மையில் ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கடற்படை முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நாடாளுமன்ற கட்டித் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக விரைவில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி விரைவில் முகாமை அகற்றுவதற்கு  நடவடிக்கை எடுப்பதாக தன்னிடம் உறுதியளித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பு, புறக்கோட்டை நடைபாதை  கடை உரிமையாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின், போது எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாப தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறவுள்ள ஞாபகார்த்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .